டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கேரளத்தில் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் வந்தவருக்கு பரிசோதனை

வெளிநாட்டிலிருந்து கேரளத்துக்கு வந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருந்ததால், அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image
கேரளத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி (கோப்பிலிருந்து)
Updated On :1 பிப்ரவரி 2024, 9:47 am

IANS


திருவனந்தபுரம்: வெளிநாட்டிலிருந்து கேரளத்துக்கு வந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருந்ததால், அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இது பற்றி கூறுகையில், கேரளத்தில் குரங்கு அம்மை நோய்த் தொற்றுடன் காணப்பட்டவரின் மாதிரிகள் புணேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மருத்துவப் பரிசோதனை முடிவுகள் இன்று மாலை தெரிய வரும். வெளிநாட்டிலிருந்து கேரளத்துக்குத் திரும்பிய நபருடன் நெருங்கிப் பழகியவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில், இவருக்கும் அறிகுறிகள் தெரிய வந்ததையடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கவலைப்படும் வகையில் தற்போது நிலைமை மோசமடையவில்லை. மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.