குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூன் 1 முதல் கனமழைக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து 27,896 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் 18,225 பேர் முகாம்களில் தங்கியுள்ளதாக மாநில பேரிடம் மேலாண்மை அமைச்சர் ரஜேந்திர திரிவாரி தெரிவித்தார்.
சோட்டா உதேபூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட போடேலி நகருக்குச் சென்று வெள்ளம் பாதித்த சில பகுதிகளை முதல்வர் பூபேந்திர படேல் வான்வழி ஆய்வு நடத்தியதாக அவரது அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்கலாம்: 150வது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்
சௌராஷ்டிராவில் உள்ள வல்சாத், நவ்சாரி, சூரத், தபி, டாங், நர்மதா, சோட்டா உதேபூர் மாவட்டங்களிலும், கட்ச், ராஜ்கோட், ஜாம்நகர், தேவபூமி துவாரகா மற்றும் மோர்பி ஆகிய மாவட்டங்களில் புதன்கிழமை காலை வரை கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகின்றது. வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு

அஸ்ஸாமில் மினி பேருந்து - லாரி மோதிக்கொண்டதில் பிரபல பிஹு நடனக் கலைஞர் பலி, 11 பேர் காயம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


