டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் வெண்கலத்தில் தேசிய சின்னம்: திறந்துவைத்தார் மோடி

புது தில்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலத்தினாலான தேசியச் சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

News image
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெண்கலத்தில் தேசிய சின்னம்
Updated On :1 பிப்ரவரி 2024, 9:46 am

ANI


புது தில்லி: புது தில்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலத்தினாலான தேசியச் சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

வெண்கலத்தினால் செய்யப்பட்ட இந்த தேசிய சின்னத்தின் ஒட்டுமொத்த எடை 9,500 கிலோவாகும். இது 6.5 மீட்டர் உயரம் கொண்டது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மைய மண்டபத்தின் மேல் பகுதியில் இந்த தேசிய சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

Story image

இந்த மைய மண்டபத்தின் மேல் அமைந்திருக்கும் இந்த தேசிய சின்னத்தின் உருவாக்கம், மண்ணால் மாதிரி உருவாக்கம், கணினியில் கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கம் என 8 படிநிலைகளுக்குப் பிறகே வெண்கலத்தில் செய்யப்பட்டு, இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய நாடாளுமன்றக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடமும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய ஊரக விவகாரத் துறை அமைச்சர் ஹர்தீப் புரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.