/

கர்நாடகத்தில் நில அதிர்வு: ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவு

கர்நாடகத்தின் விஜயபுரா மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளதாக கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :9 ஜூலை 2022, 8:03 am

கர்நாடகத்தின் விஜயபுரா மாவட்டத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளதாக கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் இன்ற காலை 6.22 மணிக்கு ஏற்பட்டது. இது கன்னூர் ஜிபி, விஜயபுரா தாலுகா மற்றும் மகாராஷ்டிரா எல்லையில் 2.3 கி.மீ மையம் கொண்டுள்ளது. 

இதுகுறித்து இயக்குனர் மனோஜ் ராஜன் கூறுகையில், 

நிலநடுக்கத்தின் தீவிரம் மிதமானது.மையத்தில் இருந்து 30-40 கி.மீ தூரம் வரை நடுக்கம் உணரப்படலாம் என்று கூறினார்.

இந்தவகையான நிலநடுக்கம் உள்ளூரில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. இருப்பினும் அதிர்வுகள் உணரப்படலாம் என்று அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.