உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர்கள் சோனு, அவரது மனைவி கீதா மற்றும் எட்டு வயது மகள் ஸ்ரீஷ்டி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தக் குடும்பத்தின் 10 வயது மகன் ஷியாம் உயிருடன் உள்ளான். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில், கீதாவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சோனு திருமணம் செய்த நிலையில், அவாஸ் விகாஸ் காலனியில் தனியாக வசித்து வந்தார்.
இதையும் படிக்கலாம்; இபிஎஸ்-க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
சுமார் 6 வருடங்களுக்கு முன்பு, சோனு ஒரு விபத்தில் சிக்கினார். பின்னர் தனது தந்தையின் தொழிலில் பணியாற்றத் தொடங்கினார். தொற்றுநோய் காலத்தில் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு தனது பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், அன்றிரவு தன்னுடன் இருந்த தனது பேரன் கீழே இறங்கிச் சென்ற பார்க்கையில், மூவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தனர். அதிர்ந்த சோனுவின் தாயார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், இந்த தற்கொலை புதிராக உள்ளதாகத் தெரிவித்தார். இதுதொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


