/

குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு பாட்னா வருகை

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கோருவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று காலை பாட்னா வந்துள்ளார்.

News image
Updated On :5 ஜூலை 2022, 6:32 am

ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கோருவதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று காலை பாட்னா வந்துள்ளார்.

அவர் சிறப்பு விமானத்தில் ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தில் காலை 11.13 மணிக்கு வந்திறங்கினார்.

முர்மு மாநில பாஜக அலுவலகத்திற்குச் செல்கிறார், மேலும் சுற்றுப்பயணத்தின் போது முதல்வர் நிதிஷ்குமாரையும் அவர் சந்திக்கிறார்.

பின்னர், காந்தி மைதானத்திற்கு அருகிலுள்ள ஒரு உணவு விடுதிக்குச் செல்கின்றார். அங்கு அவர் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் உள்பட அனைத்து தேசிய ஜனநாயக் கூட்டணி தொகுதிகளின் மூத்த தலைவர்களை சந்தித்து தேர்தலில் ஆதரவைக் கோருவார் என்று பாஜக தலைவர் ஒருவர் கூறினார். 

மேலும், இன்று பிற்பகல் பாட்னாவிலிருந்து புறப்பட்டு கௌகாத்தி வழியாக அகர்தலாவை அடைய அவர் திட்டமிட்டுள்ளார் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.