லக்னௌ: குடும்பச் சண்டையில், மனைவியை எட்டாவது மாடியிலிருந்து தூக்கிவீசிக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லெக்னௌ அருகே கோஸைகஞ்ச் பகுதியில், வசித்து வந்த சஞ்சீவ் (36), தனது மனைவி நீதுவை (32), தாங்கள் குடியிருந்த 8வது மாடியிலிருந்து தூக்கி வீசியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இவர்களுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு திருமணமான நிலையில், 7 வயதில் மகளும், 5 வயதில் மகனும் உள்ளனர். திருமணமானதிலிருந்தே இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கமாம். இந்த நிலையில், கடந்த திங்களன்று இருவருக்கும் இடையே வாய்த்தகராறு முற்றிய நிலையில், சஞ்சீவ், தனது மனைவி நீதுவை, தாங்கள் வாடகைக்கு குடியிருந்த 8வது மாடியிலிருந்து கீழே தூக்கிப்போட்டுள்ளார். இதில் நீது சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து நீதுவின் சகோதரர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சஞ்சீவுக்கு வேறொரு பெண்ணுடன் நெருங்கிய தொடர்பிருந்ததும், அதனை நீது கண்டித்ததும் சண்டைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


