/

பஞ்சாப் முதல்வர் தோல்வி பயத்தில் இருக்கிறார்: பகவந்த் மான்

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தோல்வி பயத்தில் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார். 

News image
பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி(கோப்புப்படம்)
Updated On :1 பிப்ரவரி 2024, 8:17 am

DIN

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தோல்வி பயத்தில் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார். 

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற பிப்ரவரி 20 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு காங்கிரஸ், பாஜக  கூட்டணி, ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. 

ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை கடுமையாக விமர்சித்துள்ளார். 

'பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, 2 தொகுதிகளில் போட்டியிட்டால், அவர் தோல்வி பயத்தில் இருக்கிறார் என்று அர்த்தம். அவர் ஒரு தொகுதியில் தோல்வி குறித்து பயந்தால், மற்றொரு தொகுதியையும் தோல்வியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அவர் இரு தொகுதியிலும் தோல்வியைத்தான் தழுவுவார்' என்று கூறியுள்ளார். 

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சட்டப்பேரவை த் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பதூர், சம்கௌர் சாஹிப் என இரு தொகுதிகளில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.