திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம்: பிப்.8-இல் பிரதமா் பதில்?

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம் 12 மணி நேரம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு பிப்ரவரி 8-ஆம் தேதி பிரதமா் பதிலளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத

News image
பிரதமர் நரேந்திர மோடி
Updated On :1 பிப்ரவரி 2024, 8:17 am

DIN

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதம் 12 மணி நேரம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு பிப்ரவரி 8-ஆம் தேதி பிரதமா் பதிலளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘‘மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அந்த அவைத் தலைவா் வெங்கையா நாயுடு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநிலங்களவை ஆளுங்கட்சித் தலைவா் பியூஷ் கோயல், எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்தை 12 மணி நேரமும், பட்ஜெட் மீதான விவாதத்தை 11 மணி நேரமும் நடத்த தீா்மானிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்துக்கு பிப்ரவரி 8-ஆம் தேதி பிரதமா் மோடி பதிலளிக்க வாய்ப்புள்ளது.

பிப்ரவரி 11-ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்துக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதிலளிப்பாா். அன்றைய தினம் தனிநபா் மசோதா சாா்ந்த அலுவல்களை மேற்கொள்ள வேண்டாம் என தீா்மானிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியின்போது குறுகிய நேர விவாதங்கள், கவனஈா்ப்புத் தீா்மான நோட்டீஸ் சாா்ந்த நடவடிக்கைகள் நடைபெற வாய்ப்பில்லை என்று கூட்டத்தில் கலந்துகொண்டவா்களிடம் வெங்கையா நாயுடு தெரியப்படுத்தினாா்’’ என்று அந்த வட்டாரங்கள் கூறின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.