புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

ம.பி.யில் சாலை விபத்து: 7 பேர் பலி, பலர் காயம்

மத்தியப் பிரதேசத்தின் தார் மற்றும் சத்னா மாவட்டங்களில் நடந்த இரண்டு சாலை விபத்துகளில் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். 

News image
Updated On :3 ஆகஸ்ட் 2022, 7:08 am

மத்தியப் பிரதேசத்தின் தார் மற்றும் சத்னா மாவட்டங்களில் நடந்த இரண்டு சாலை விபத்துகளில் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். 

பாக் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தார் மாவட்டத் தலைமையகத்திலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ள டெஹ்ரி கிராமத்திற்கு அருகே இருசக்கர வாகனம் கார் மீது மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் என்று துணைப் பிரிவு காவல்துறை அதிகாரி திலீப் சிங் பில்வால் தெரிவித்தார். 

விபத்தில் உயிரிழந்தவர்கள் 25 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள். நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கார் கவிழ்ந்ததில், சம்பவ இடத்திலேயே வாகனத்தை விட்டு கார் ஓட்டுநர் தப்பியோடியுள்ளார். 

அடுத்ததாக, சத்னா மாவட்டத்தில், மாவட்ட தலைமையகத்திலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள கைர்ஹானி கிராமத்திற்கு அருகே ஜீப் கால்வாயில் கவிழ்ந்ததில் மூன்று பெண்கள் உயிரிழந்தனர் என்று ராம்நகர் காவல் நிலைய பொறுப்பாளர் ரோஹித் யாதவ் தெரிவித்தார்.

அதே வாகனத்தில் பயணித்த மேலும் 7 பேர் படுகாயமடைந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.