பேஸ்புக், ட்விட்டர் பக்கங்களின் முகப்புப் படத்தை மாற்றிய பிரதமர் மோடி!
75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பக்கங்களின் முகப்புப் படத்தை மாற்றியுள்ளார்.


75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் பொருட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பக்கங்களின் முகப்புப் படத்தை மாற்றியுள்ளார்.
இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினவிழாவை சிறப்பாகக் கொண்டாட மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, சுதந்திர நாளைக் கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் ஆகஸ்ட் 13- 15 வரை ஆகிய 3 நாள்கள் தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், சமூக வலைதள பக்கங்களில் தேசியக்கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தனது முகநூல், ட்விட்டர் பக்கங்களின் முகப்புப் புகைப்படத்தை மாற்றி தேசியக்கொடியை வைத்துள்ளார். 75 ஆவது ஆண்டு சுதந்திர நாளையொட்டி அனைவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களின் முகப்புப் படமாக தேசியக்கொடியை வைக்க வேண்டும் என்று வலியறுத்தியுள்ளார்.
பிரதமரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் மாற்றி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...