புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

கேரள திரைப்பட விருது வழங்கும் விழா ஒத்திவைப்பு

கேரளத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் சிவப்பு நிற எச்சரிக்கை காரணமாக மாநில திரைப்பட விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. 

News image
Updated On :2 ஆகஸ்ட் 2022, 7:52 am

கேரளத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் சிவப்பு நிற எச்சரிக்கை காரணமாக மாநில திரைப்பட விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. 

ஆகஸ்ட் 3ஆம் தேதி தலைநகர் நிஷாகாந்தி திறந்தவெளி அரங்கில் நடைபெறவிருந்த திரைப்பட விருது வழங்கும் விழா மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெறும் தேதியை பின்னர் அறிவிக்கப்படும் என்று கலாசார விவகார அமைச்சர் வி.என்.வாசவன் தெரிவித்தார். 

தென் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாள்களாக இடைவிடாத கனமழை பெய்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று 10 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.