ஜபல்பூர்: மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 4 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
ஜபல்பூர் பகுதியில் உள்ள கோஹல்பூர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியான தாமோஹ் நகா அருகே உள்ள நியூ லைஃப் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் இன்று பிற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்துநேரிட்டதாகக் கூறப்படுகிறது. தீ விபத்துக்குள்ளான மருத்துவமனையில் தீயை அணைக்கும் பணியும் நோயாளிகளை மீட்கும் பணியும் நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து காவல்துறை கூறுகையில், மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்தனர். இது மிகப்பயங்கர தீ விபத்தாக உள்ளது. மருத்துவமனைக்குள் சிக்கியிருந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் மரணமடைந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படு என்று மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான் அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


