‘இ-சஞ்சீவினி’ திட்டத்தின் கீழ் நாள்தோறும் 90,000 மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தியில்,
“இ-சஞ்சீவினி திட்டத்தின் கீழ் நாள்தோறும் 90,000 மருத்துவ ஆலோசனைகள் பெறுகின்றனர். இதுவரை மொத்தம் 1.20 கோடி பேர் பயனடைந்துள்ளனர். அதிகபட்சமாக ஆந்திரத்தில் 37.04 லட்சம், கர்நாடகம் 22.57 லட்சம், தமிழகத்தில் 15.62 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.”
இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றினால் ஏற்பட்டுள்ள சவாலான சூழ்நிலையில் பொதுமக்கள், மருத்துவா்களை நேரடியாக சந்திக்க இயலாத நிலை இருந்தது. அதைக் கருத்தில் கொண்டு தங்கள் இருப்பிடங்களில் இருந்தே இணையதளம் வாயிலாக மருத்துவா்களிடம் ஆலோசனை பெறும் ‘இ-சஞ்சீவினி’ ஓபிடி என்ற திட்டம் மத்திய அரசால் தொடங்கி வைக்கப்பட்டது.
இச்சேவையைப் பயன்படுத்த இணையதளம் வாயிலாகவோ அல்லது ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவோ தங்களது தொலைபேசி எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னா், மருத்துவருடன் தொடா்பு கொண்டு காணொலி முறையில் மருத்துவ ஆலோசனை பெறலாம்.
மேலும், மருத்துவரின் மருத்துவப் பரிந்துரைச் சீட்டு நோயாளிகளின் செல்லிடப்பேசிக்கு மின்னணு வடிவில் அனுப்பி வைக்கப்படும். அதைப் பயன்படுத்தி, அருகிலுள்ள அரசு மருத்துவமனை மருந்தகங்கள் அல்லது தனியாா் மருந்தகங்களில் மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆன்த்ரோபிக் ‘மித்தோஸ்’ ஏஐ - புதிய அச்சுறுத்தல்: நிதியமைச்சா் எச்சரிக்கை

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு

தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


