கர்நாடகத்தில் பள்ளிகள் திறப்பு: 35.64% மாணவர்கள் வருகை
கர்நாடகத்தில் நேற்று 6-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கின. முதல் நாளான நேற்று 35.64 சதவீத மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்ததாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.


பெங்களூரு: கரோனா பேரிடரால் மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டு வரும் நிலையில், கர்நாடகத்தில் நேற்று 6-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கின. முதல் நாளான நேற்று 35.64 சதவீத மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்ததாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
கரோனா பரவல் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றி, 6 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் நேற்று தொடங்கின.
8ஆம் வகுப்பு பயிலும் 23.22 சதவீதம் மாணவர்கள் மட்டுமே நேற்று பள்ளிக்கு வருகை தந்துள்ளனர்.
6ஆம் வகுப்பில் பயிலும் 29.15 சதவீத மாணவர்களும், 7ஆம் வகுப்பில் பயிலும் 28.05 சதவீத மாணவர்களும் முதல் நாளான நேற்று பள்ளிக்கு வந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், நேற்று 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...