இந்திய பாரம்பரியத்தில் இறைவனுக்கு சமமாக ஆசிரியர்கள் கருதப்படுகிறார்கள் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆசிரியர் நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது: “தலைசிறந்த கல்வியாளர், தத்துவஞானி மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் ஒழுக்க மேம்பாட்டில் முன்னிலை வகிக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் தருணமாக ஆசிரியர் தினம் அமைகிறது. இந்திய பாரம்பரியத்தில் இறைவனுக்கு சமமாக ஆசிரியர்கள் கருதப்படுகிறார்கள்.