உத்தரப்பிரதேசத்தில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு ஆட்சி மாற்றம் இருக்காது என மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
லக்னெளவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், வருகின்ற தேர்தலில் 403 இடங்களில் 400 இடங்களில் வெல்வோம் என்றார்.
இதுகுறித்து விமரிசித்து மத்திய அமைச்சர் முக்தார் கூறியது:
“உத்தரப்பிரதேசம் தேர்தலில் 400 இடங்களை வெல்வோம் என அகிலேஷ் யாதவ் கூறியது கற்பனையே. இதுபோன்ற தவறான புரிதல், அரசியல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அடுத்த 20 ஆண்டுகளுக்கு உ.பி.யிலும், மத்தியிலும் ஆட்சி மாற்றம் நடக்காது.”
உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து வார்த்தைப்போர் நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வன விலங்குகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை: வனத் துறை எச்சரிக்கை

சிறுமியின் 7 மாத கருவை கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி

கிழக்கு இந்தியா முழுவதும் அடுத்த மாதம் பாஜக அரசுகள் - அமித் ஷா

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


