பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஜம்மு - காஷ்மீர்: 2 வாரங்களில் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் கடந்த 2 வாரங்களில் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.ஜி. விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

News image

ஐ.ஜி. விஜய் குமார்

Updated On :20 அக்டோபர் 2021, 7:25 am

ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் கடந்த 2 வாரங்களில் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.ஜி. விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் இந்த மாதத்தில் மட்டும் தீவிரவாதிகளால் பல்வேறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், ராணுவ அதிகாரிகள், வீரர்கள், பள்ளி ஆசிரியர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், பொதுமக்கள் என பலர் பலியாகியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதல்களில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் கூறுகையில்,

“இன்றைய தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர் அடில் ஆஹ் வானி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், கடந்த வாரம் புல்வாமாவில் தொழிலாளரை கொன்றதில் சம்பந்தப்பட்டுள்ளார். மேலும், கடந்த 2 வாரத்தில் மட்டும் 15 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.