திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மும்பை-சென்னைக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்

மும்பை சிஎஸ்எம்டி-சென்னை சிறப்பு ரயில் உள்பட 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:22 am

DIN

மும்பை சிஎஸ்எம்டி-சென்னை சிறப்பு ரயில் உள்பட 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

மும்பை சிஎஸ்எம்டி (சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம்)-இல் இருந்து நாள்தோறும் பிற்பகல் 12.45 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (01459) புறப்பட்டு, மறுநாள் காலை 10.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில் சேவை நவ. 1-ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது.

மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து நாள்தோறும் பிற்பகல் 1.25 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (01460) புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு மும்பை சிஎஸ்எம்டி-யை அடையும். இந்த ரயிலின் சேவை நவ.2-ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது.

லோக்மான்யா திலக்-சென்னை: லோக்மான்யா திலக்கில் இருந்து திங்கள்கிழமைகளில் மதியம் 1.20 மணிக்கு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (01479) புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில் சேவை நவ.1-ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது.

மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் முற்பகல் 3.50 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (01480) புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 2.25 மணிக்கு லோக்மான்யாதிலக்கை அடையும். இந்த ரயில் சேவை நவ.2-ஆம்தேதி தொடங்குகிறது. இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.