தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

நாட்டில் 70% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
மன்சுக் மாண்டவியா (கோப்புப் படம்)
Updated On :28 ஜனவரி 2024, 4:18 am

ANI

நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று வெளியிட்ட செய்தியில்,

சர்வதே அளவில் அதிகளவிலான பொது மருந்துகளை இந்தியா தயாரித்து வருகின்றது. உலகம் முழுவதும் உள்ள 150 நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும், நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

நாட்டில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 91 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது. மேலும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவட்தற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.