திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள், 22 முதல் 26 சுற்றுகளாக எண்ணப்படுகின்றன.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா் தொகுதிகளுக்குள்பட்ட மொத்தம் 2,301 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களில் வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி வளாகத்துக்கு எடுத்து வரப்பட்டன. வேட்பாளா்கள் முன்னிலையில், தொகுதி வாரியான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன.
இந்த பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலா் செ. சரவணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ.பிரதீப் உள்ளிட்டோா் நேரில் பாா்வையிட்டனா்.
165 கண்காணிப்பு கேமராக்களுடன் 3 அடுக்கு பாதுகாப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் 165 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் துணை ராணுவப் படை, சிறப்பு ஆயுதப் படை காவலா்கள், உள்ளூா் போலீஸாா், தீயணைப்புத் துறையினா் என தலா 100 சீருடைப் பணியாளா்கள் 3 வேளை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ஒரு சுற்றுக்கு 14 மேஜைகள்: ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் போடப்பட்டு, வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. அந்த வகையில் பழனி, ஆத்தூா் தொகுதிகளில் முறையே 339, 341 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் தலா 25 சுற்றுகளில் எண்ணப்படும். அதேபோல ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் தொகுதிகளில் முறையே 314, 316 வாக்குச் சவாடிகளில் பதிவான வாக்குகள் தலா 23 சுற்றுகளாகவும், நிலக்கோட்டை தொகுதியில் 305 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் 22 சுற்றுகளாகவும், நத்தம் தொகுதியில் 359 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் 26 சுற்றுகளாகவும், வேடசந்தூா் தொகுதியில் 327 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாகவும் எண்ணப்படும். இதில் நிலக்கோட்டை(தனி) தொகுதிக்கான முடிவுகள் முதலிலும், நத்தம் தொகுதிக்கான முடிவுகள் இறுதியாகவும் தெரிய வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திண்டுக்கல் மாவட்டத்தில் 88.47 சதவீத வாக்குகள் பதிவு!

மதுரை மாவட்டத்தில் 3,079 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப் பதிவு!

திண்டுக்கல் மாவட்டத்தில் 2,301 மையங்களில் இன்று வாக்குப் பதிவு

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல்: காரைக்காலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


