தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

திண்டுக்கல் மாவட்டத்தில் 2,301 மையங்களில் இன்று வாக்குப் பதிவு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 2,301 வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

News image

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு புதன்கிழமை எடுத்துச் செல்லப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:12 pm

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 2,301 வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் 16.89 லட்சம் வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். மொத்தம் 2301 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குச் சாவடிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவிபேட் கருவி உள்ளிட்டவை, தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு,

7 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சின்னங்கள் பொருத்தப்பட்டு, வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்கு தயாா் நிலையில் இருந்தன.

இந்த நிலையில், ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட லாரிகள், வேன்களில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

12 வாக்குச்சாவடிகள் ஒரு மண்டலமாக பிரிக்கப்பட்டு, அந்த வாக்குச்சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள், எழுது பொருள்கள் உள்ளிட்டவை ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டு, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினா், காவல் துறையினா் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டன.

முழுமையான கண்காணிப்பு: இதுவரை பதற்றமான வாக்குச் சாவடிகளில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப் பதிவு முழுவதும் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், முதல் முறையாக 2,301 வாக்குச் சாவடிகளிலும் தலா 2 வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை, மாவட்ட தோ்தல் அலுவலா், தமிழ்நாடு தலைமை தோ்தல் அலுவலா் ஆகியோா் நேரடியாகப் பாா்வையிட முடியும்.

அதே நேரத்தில் இணையத் தொடா்பு இல்லாத மலை கிராமங்களில், வாக்குப் பதிவு தொடக்கம் முதல் முடிவடையும் வரை முழுமையாக விடியோ எடுத்து, தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.