ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

மேற்கு வங்கத்தில் மே 16-30 முழு ஊரடங்கு அறிவிப்பு

கரோனா பரவல் கடுமையாக அதிகரித்துவரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் மே 30 வரை மேற்கு வங்க அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. 

News image

மேற்கு வங்கத்தில் மே 16-30 முழு ஊரடங்கு அறிவிப்பு

Updated On :15 மே 2021, 8:37 am

மேற்கு வங்கம்

கரோனா பரவல் கடுமையாக அதிகரித்துவரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் மே 30 வரை மேற்கு வங்க அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் கூறியதாவது, 

தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சில கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் மே 30 மாலை 6 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் கூறியுள்ளார். 

இந்த காலகட்டத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மால்கள், பார்கள், விளையாட்டு வளாகங்கள், விடுதிகள் மற்றும் அழகு நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். 

தனியார் வாகனங்கள், டாக்ஸிகள், பேருந்துகள், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களின் இயக்கமும் அடுத்த 15 நாள்களுக்கு அனுமதிக்கப்படாது.

மேலும், பெட்ரோல் பங்குகள், பால், தண்ணீர், மருந்து, மின்சாரம், சட்டம் மற்றும் ஒழுங்கு போன்ற அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஊடகங்கள் வழக்கம்போல் செயல்படும். 

ஈ-காமர்ஸ் மற்றும் வீட்டு விநியோக சேவைகள் அனுமதிக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.