டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தில்லியில் கரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது: கேஜரிவால்

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 6,500 கரோனா வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், தேசிய தலைநகரில் கரோனா தெற்று வெகுவாக குறைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

News image

தில்லியில் கரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது: கேஜரிவால்

Updated On :15 மே 2021, 8:02 am

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 6,500 கரோனா வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், தேசிய தலைநகரில் கரோனா தெற்று வெகுவாக குறைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் தெரிவித்ததாவது, 

கடந்த 24 மணி நேரத்தில், தில்லியில் வெறும் 6,500 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. நேர்மறை விகிதம் 11 சதவீதமாகக் குறைந்துள்ளது. கரோனா தாக்கம் தில்லியில் வெகுவாக குறைந்து வருகின்றது. 

தில்லியில் கடந்த ஒரு வாரமாக படிப்படியாக கரோனா தொற்று குறைந்து வருகின்றன. கடந்த மாதம் ஏப்ரல் 21-ம் தேதி ஒருநாள் பாதிப்பு கிட்டத்தட்ட 28,395 ஆகப் பதிவாகியிருந்தது. இதையடுத்து, கடந்த வாரம் கரோனா தொற்று எண்ணிக்கை 20 ஆயிரமாகக் குறைந்தது. 

கரோனா நோய்த்தொற்றுகள் அதிகரிப்பதைக் கருத்தில்கொண்டு கடந்த ஏப்ரல் 19 முதல் தில்லியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த பொது முடக்கமானது மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.