மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக கட்சி அமைச்சர் கூறுகையில்,
எங்கள் கட்சித் தலைவர் சரத் பவார் சாஹேப் நேற்று மாலை வயிற்றில் ஏற்பட்ட வலி காரணமாகச் சோதனைக்காக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவருக்கு பித்தப்பையில் சிறு சிக்கல் இருப்பதாகவும், தற்போது அதற்கான மருந்துகள் அவருக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும்
பித்தப்பை பிரச்னையை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மார்ச் 31-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, எண்டோஸ்கோபி மற்றும் அறுவை சிகிச்சை நடத்தப்பட உள்ளது.
மேலும், அவர் கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்ச்சிகள் அனைத்து அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை ரத்து செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
80 வயதாகும் பவார் சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள தொழிலதிபர் இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெலங்கானா: தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


