/

ஜம்மு-காஷ்மீரில் ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கோட்டிற்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து ஐந்து ஏ.கே. ரகத் துப்பாக்கிகள் உள்பட ஆயுதங்கள்  பறிமுதல் செய்துள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image

ஜம்மு-காஷ்மீரில் ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்

Updated On :29 மார்ச் 2021, 5:47 am

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கோட்டிற்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து ஐந்து ஏ.கே. ரகத் துப்பாக்கிகள் உள்பட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார். 

கர்னாவில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலின்படி, ராணுவம் மற்றும் காவல்துறையினர் விழிப்புணர்வாக இருந்தனர். 

இந்நிலையில், பாதுகாப்புப் படையினர் குறிப்பிட்ட உளவுத்துறையின் அடிப்படையில் நடவடிக்கையைத் தொடங்கினர். அப்போது பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த 5 ஏ.கே. ரக துப்பாக்கிகள் மற்றும் 7 கைத்துப்பாக்கிகள் பல இதழ்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டனர்.

லிபா பள்ளத்தாக்கில் உள்ள தன்னி கிராமத்தில் எல்லைக் கோட்டிற்கு மிக அருகில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.