கரோனா தொற்று தொடர்ந்து பரவுவதைத் தடுக்கும் வகையில் லூதியாணாவில் காலவரையின்றி இரவு நேரப் பொது முடக்கத்தை அந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அடுத்த உத்தரவு வரும் வரை இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை காலவரையற்ற பொது முடக்க உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடக்கம், இரவு நேரங்களில் தேவையற்ற கூட்டம் கூடுவரை தவிர்க்கும் வகையில் இது அமல்படுத்தப்பட்டுள்ளதாக லூதியாணா துணை ஆணையர் வருந்தர் சர்மா தெரிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களாக வைரஸ் தொற்று எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. முன்னதாக 4000 சோதனைகளில் ஒரு சதவீதம் நேர்மறையாகவும், தற்போது 5-6 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மேலும், சராசரியாக இறப்பு எண்ணிக்கை வாரத்திற்கு ஏழாக இருந்தது. தற்போது 25-30 வரை எட்டியுள்ளது.
மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மேலும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது என்று சர்மா தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். கரோனா தடுப்பூசியைக் கட்டாயம் அனைவரும் செலுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 39,726 புதிய தொற்றும், 20,654 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 154 இறப்புகள் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


