அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 25,833 பேருக்கு கரோனா 

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,833 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

News image

மகாராஷ்டிரத்தில் புதிதாக 25,833 பேருக்கு கரோனா 

Updated On :19 மார்ச் 2021, 5:57 am

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 25,833 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், 

கரோனா இரண்டாம் அலையால் மகாராஷ்டிர மாநிலத்தில் தொடர்ந்து தொற்று அதிகரித்தவண்ணம் உள்ளது. அந்தவகையில், கடந்த 24 மணி நேரத் தகவலின்படி, 

புதிதாக 25,833 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 2,39,6,340 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 12,764 பேர் நோயிலிருந்து மீண்டுள்ள நிலையில், 2,17,5,565 பேர் குணமடைந்துள்ளனர். 

ஒரேநாளில் 58 பேர் பலியாகியுள்ள நிலையில், 53,138 பேர் இன்றுவரை உயிரிழந்துள்ளனர். 1,66,353 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

கரோனா தொற்று அதிகரித்துள்ளதால் பல மாவட்டங்களில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புணேவில் ஒரேநாளில் 4,965 பேர் பாதிப்பும் 31 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.