மங்களூரு: துபையில் ஒரு சில நாள்களுக்கு முன்பு காணாமல் போன இந்தியரின் சடலம் கைப்பற்றப்பட்டதாக துபை காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்த நபர், முத்தாலிப் என்றும், அவர் கர்நாடக மாநிலம் பந்த்வால் தாலுகா, நர்ஷா பொலந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
துபையில் பணியாற்றி வந்த முத்தாலிப்பின் செல்லிடப்பேசி எண் ஒரு சில நாள்களுக்கு முன்பு அணைத்துவைக்கப்பட்டதாகவும், அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல், குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர்.
இந்த நிலையல், அவர் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் உறுதி சய்துள்ளனர். அல் - ரஃபா பகுதியில் கடந்த ஞாயிறன்று அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டின் அடிப்படையில் அவர் அடையாளம் காணப்பட்டு இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவரது உடர் துபை ரஷித் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படித்துவிட்டு, துபையில் பணியாற்றி வந்த முத்தாலிப், செய்தித்தாள்களிலும் கட்டுரைகள் எழுதி வந்துள்ளார். உண்மையில் அவரது மரணத்துக்கான காரணம் பற்றி இதுவரை தகவல் தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!

ஏப்.26-ல் சூர்யாவின் கருப்பு இசை வெளியீட்டு விழா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


