பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பாஜக எம்.பி.யின் மகன் மீது துப்பாக்கிச்சூடு: நாடகம் என்கிறது காவல்துறை

பாஜக எம்.பி. கௌஷல் கிஷோரின் மகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இது யாரையோ திட்டமிட்டு சிக்கவைக்க நடத்தப்பட்ட நாடகம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News image

பாஜக எம்.பி.யின் மகன் மீது துப்பாக்கிச்சூடு: நாடகம் என்கிறது காவல்துறை (கோப்பிலிருந்து)

Updated On :3 மார்ச் 2021, 8:09 am


லக்னௌ: பாஜக எம்.பி. கௌஷல் கிஷோரின் மகன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இது யாரையோ திட்டமிட்டு சிக்கவைக்க நடத்தப்பட்ட நாடகம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோஹன்லால்கஞ்ச் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கௌஷல் கிஷோரின் மகன் ஆயுஷ் (30). இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் மாடியோன் என்ற பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

இது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், வேண்டுமென்றே யாரையோ சிக்கவைக்க, ஆயுஷ் தனது மைத்துனரை துப்பாக்கியால் சுட வைத்து நாடகமாடியிருப்பதாக லக்னௌ காவல் ஆணையர் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்படவில்லை என்றும், சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் புகாரளிக்கவில்லை என்றும், துப்பாக்கி மட்டும் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.