கரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நந்த்குமார் சிங் செளகானுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாஜக உறுப்பினர் நந்த்குமார் சிங் சௌகான் செவ்வாய்க்கிழமை காலை காலமானார். அவருக்கு வயது 69. கடந்த 11-ம் தேதி கரோனா தொற்று பாதிக்கப்பட்டு, குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று பிரிந்தது.
அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் புதன்கிழமை புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான ஷாஹ்பூரில் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
பாஜக உறுப்பினர் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாடாளுமன்ற நடவடிக்கைகள், நிறுவன திறன்கள் மற்றும் பாஜகவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் முக்கிய பங்காற்றியவர் நந்த்குமார் சிங். மத்தியப் பிரதேசத்தில் அவரது பங்களிப்பு மறக்கமுடியாதது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் "ஓம் சாந்தி" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், நந்த்குமார் சிங் மறைவுக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகானும் வருத்தம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


