இந்தியா உள்பட உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது
தில்லி உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் மத்திய அமைச்சர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் தங்களது வீடுகளில் யோகாசனங்களை செய்தனர்.
‘யோகா, ஒரு இந்திய பாரம்பரியம்’ என்ற தலைப்பில் சா்வதேச யோகா தினத்தை மத்திய கலாசார அமைச்சகம் கொண்டாடுகிறது.
இதில் தில்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் யோகாசனம் செய்தார்.
மேலும், மத்திய அமைச்சர்கள் கலாசாரத் துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல், அனுராக் தாக்குர் உள்ளிட்ட பலர் தங்களது வீடுகளில் யோகாசனங்களை செய்தனர்.
தில்லியில் உள்ள தமது இல்லத்தில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குடும்பத்தினருடன் யோகாசனம் செய்தார்.
மேலும், சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் தங்களது இல்லங்களில் யோகா செய்தனர்.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் பாபா ராம்தேவ் குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமான மக்களுடன் யோகாசனம் செய்தார்.
கல்வான் பள்ளத்தாக்கு, லடாக் மற்றும் அருணாச்சலத்தில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் யோகாசனங்களை செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!
கஃபுள் பிரண்ட்லி அசத்தல் வசூல்!

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியது ஏன்? நடிகை கனிகா விளக்கம்
வீடியோக்கள்

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
தினமணி வீடியோ செய்தி...

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

