/

கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுங்கள்: அரவிந்த் கேஜரிவால்

கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுங்கள் என்று பொதுமக்களுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

News image

கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுங்கள்: அரவிந்த் கேஜரிவால்

Updated On :7 ஜூன் 2021, 5:38 am

புது தில்லி: புது தில்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றுங்கள் என்று பொதுமக்களுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்தபடி, தில்லியில் சந்தைகளை திறக்க அனுமதி,  50 சதவீத பயணிகளுடன் மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல முக்கிய தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தில்லியில் பல்வேறு நடவடிக்கைகள் இன்று முதல் தொடங்குகின்றன. ஆனால், பொதுமக்கள் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், அதில் எந்த தளர்வும் வேண்டாம் என்று அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கரோனா தொற்றுப் பரவலிலிருந்தும் தப்பிக்க வேண்டும், மறுபக்கம் நமது பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என்று கேஜரிவால் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.