பாட்னா: 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தங்க நாணயம், ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற பரிசுகள் வழங்கப்படும் என்று பிகார் மாநிலம் ஷீஹோர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த மாவட்டத்துக்குள்பட்ட பல கிராமங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் மாவட்ட நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பதாவது, ஜூலை 15க்குள் 45 வயதுக்கு மேற்பட்டிருக்கும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். பொதுவாக பருவமழைக் காலத்தில் ஷீஹோர் மாவட்டம் வெள்ள அபாயம் ஏற்படும் பகுதி. மழைக்காலம் தொடங்கிவிட்டால் பல கிராமங்களுக்குச் செல்லவே முடியாது.
இங்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். இவர்களில் சிலர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். எனவேதான் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். அதன்படி ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களில் 5 பேர் தேர்வு செய்யப்பட்டு, தங்க நாணயம், ஃபிரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற வீட்டு உபயோகப் பொருள்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆன்த்ரோபிக் ‘மித்தோஸ்’ ஏஐ - புதிய அச்சுறுத்தல்: நிதியமைச்சா் எச்சரிக்கை

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு

தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


