ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,872 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜூன் நான்காம் தேதி ஆந்திரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஐந்தாயிரத்துக்கும் குறைவான பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், புதிதாக 5 ஆயிரத்துக்கும் குறைவானோருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,63,211 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 13,702 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,37,149 பேர் குணமடைந்துள்ளனர். 86 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11,552 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 1,14,510 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கற்றுக்கொள்ள சிறந்த தளம் மனதின் குரல் நிகழ்ச்சி! பாஜக தலைவர் பேச்சு
உளவியல் ஆய்வில் 16 உண்மைகள்
மரக்கன்று நடுவோம்...

ரயில்வேயில் ஆள்குறைப்பு நடவடிக்கை கூடாது: இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


