பெங்களூரு: எஸ்எஸ்எல்சி அல்லது 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் நடத்தப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
அதேவேளையில், பியூசி எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கு முந்தைய இரண்டாம் ஆண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் இந்த ஆண்டு பியூசி தேர்வுகள் நடத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாமாண்டு தேர்வுகளில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்று கர்நாடக துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிக் கல்வி அமைச்சர் எஸ். சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
தற்போது பியூசி இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று அடுத்த நிலைக்குச் செல்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் எஸ்எஸ்எல்சி அல்லது 10ஆம் வகுப்புத் தேர்வை நடத்துவது என்று அரசு முடிவு செய்துள்ளது. இது ஜூலை மாதம் மூன்றாவது வாரம் நடத்தப்படும். அறிவியல், கணிதம், சமுக அறிவியல் மற்றும் மொழித் தேர்வுகளுக்கு விடையைத் தேர்வு செய்யும் வகையில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பவானிபூரில் முதல்வர் மமதா சாலைவலம்; பொதுமக்களுடனும் கலந்துரையாடல்

இந்த வாரம் கலாரசிகன் - 26-04-2026

அகண்டா இயக்குநருடன் இணையும் கார்த்தி?

ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பேச்சு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


