12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் போன்று 12-ம் வகுப்பு மாநில அரசுகளின் தேர்வுகளும் ரத்து செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் புதன்கிழமை கூறியுள்ளார்.
கரோனா தொற்று நாட்டில் கடுமையாகப் பரவிவருவதையடுத்து சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி நேற்று கூறியுள்ளார். இது மாணவர்களின் நலனுக்காகவும், மாணவர்கள், பெற்றோர்களின் பதட்டத்தை போக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கோரினார்.
இதுகுறித்து யாதவ் வெளியிட்ட சுட்டுரை பதிவில்,
சிபிஎஸ்இ 12-ம் வகுப்புத் தேர்வுகள் போன்று 12-ம் வகுப்பு மாநில அரசுகளின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று இந்தியில் அவர் பதிவிட்டுள்ளார்.
தேர்வுகள் ரத்து செய்யப்படுவது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்காக என்று உத்தரப் பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
மேலும், 12-ம் வகுப்பு மாநில அரசு தேர்வுகள் குறித்து முதல்வருடனான சந்திப்புக்குப் பின்னர் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறைந்தபட்ச ஊதியம் ரூ. 69,000 வழங்க வேண்டும்: 8-வது ஊதியக் குழுவுக்கு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை!

பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! அவரால் பலன் இல்லை! - பாஜக

வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


