லக்னௌ: உத்திரப்பிரதேச மாநிலம் லக்னௌவில், கடந்த 20 நாள்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பலியான நிலையில் இமாலியா கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
ஏப்ரல் 25 முதல் மே 15-ஆம் தேதிக்குள் அதாவது 20 நாள்களில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கரோனா பாதித்து ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்துள்ளனர். இந்த துக்கத்தைத் தாள முடியாத 8வது நபர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சகோதரர்களும் அடங்குவர்.
அந்தக் குடும்பத்தில் தற்போது உயிரோடு இருக்கும் குடும்பத் தலைவர் ஓம்கார் யாதவ் இது பற்றி கூறுகையில், எனது நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள், ஒரு தாய் என ஏழு பேரும் கரோனா பாதித்து உயிரிழந்துவிட்டனர். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத எனது சித்தியும் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.
ஒரே நாளில் காலையில் எனது தாய்க்கும், மதியம் எனது 3 சகோதரர்களுக்கும் இறுதிச் சடங்கினை செய்தேன். அடுத்தடுத்த நாள்களில் எனது இரண்டு சகோதரிகளும், இளைய சகோதரரும் உயிரிழந்துவிட்டனர்.
ஒவ்வொருவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு சிகிச்சை கிடைக்காமல் மரணமடைந்துவிட்டனர். ஒரே குடும்பத்தில் 7 பேர் கரோனாவுக்கு பலியாகியும், அரசு தரப்பில் யாருமே இந்த கிராமத்துக்கு வரவில்லை என்கிறார் கிராமத் தலைவர். தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மாயமாக மறைந்துவிடுவது ஏன் என்று கூடத் தெரியாமல் தவித்து வருகிறார்கள். உடல்கள் இங்கு வரும்போது, அவர்களை பக்கத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவோம். இன்னமும் அவர்கள் எல்லாம் விரைவில் வீட்டுக்கு வருவார்கள் என்றுதான் குழந்தைகள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று குடும்ப உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.
பெற்றோரை இழந்த இந்தக் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்ற கவலையையும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். அரசு சார்பில் ஏதேனும் உதவி கிட்டுமா என்பது கூட எங்களுக்குத் தெரியவில்லை என்கிறார்கள் கவலையோடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆன்த்ரோபிக் ‘மித்தோஸ்’ ஏஐ - புதிய அச்சுறுத்தல்: நிதியமைச்சா் எச்சரிக்கை

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு

தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


