மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பல்வேறு நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலியாகியுள்ளனர்.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த காரணத்தால் மகாராஷ்டிர மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் பல இடங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ராய்கட் மாவட்டம் தலாய் மற்றும் மலாய் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 36 பேர் பலியாகியுள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட 30க்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பல்வேறு இடங்களுக்கு செல்லும் சாலைகளும் பாலங்களும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் படையினர் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே சதாரா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் 8 பேர் பலியாகியுள்ளதாகவும் 2 பேரைக் காணவில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?
அரசன் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது!

மகாநதி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

வரலாற்றுச் சாதனையில் தமிழன்: கிறிஸ் கெயிலை முந்திய சாய் சுதர்சன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

