ஜம்மு விமானப் படைத் தளம் அருகே பறந்த மற்றொரு டிரோன்
ஜம்முவில் உள்ள விமானப் படைத் தளத்தை நேற்று பயங்கரவாதிகள் ஆயுதங்கள் தாங்கிய டிரோனைக் கொண்டு தாக்க முயன்ற நிலையில், புதன்கிழமை இரவில் மற்றொரு டிரோன் பறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஜம்மு: ஜம்முவில் உள்ள விமானப் படைத் தளத்தை நேற்று பயங்கரவாதிகள் ஆயுதங்கள் தாங்கிய டிரோனைக் கொண்டு தாக்க முயன்ற நிலையில், புதன்கிழமை இரவில் மற்றொரு டிரோன் பறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த டிரோனை, ஆன்டி-டிரோன் தொழில்நுட்பத்தின் உதவியோடு, இந்திய விமானப் படையினர் செயலிழக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஒரு சில வாரங்களாகவே, ஜம்முவின் பல்வேறு பகுதிகளிலும் டிரோன்கள் பறப்பது அதிகரித்துள்ளது.
ஸ்ரீநகர், குப்வாரா, ரஜௌரி மற்றும் பாரமுல்லா பகுதிகளிலும் டிரோன்கள் மூலம் விற்பனை, பொருள்கள் பரிமாற்றம் போன்ற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 27ஆம் தேதி, ஜம்முவில் சர்வதேச எல்லைக் கோட்டுப் பகுதிக்கு அருகே ஜம்மு மாவட்டத்தில் டிரான்கள் பறந்துவந்து இந்திய விமானப் படைத் தளத்தின் அலுவலகக் கட்டடத்தை சேதப்படுத்தின. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தேசிய நுண்ணறிவுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...