புது தில்லி: தில்லியில் வழக்கமாக பருவமழை தொடங்கும் நாளை விட 16 நாள்கள் தாமதமாக இன்று தொடங்கியது. தில்லியில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
வழக்கமாக தில்லியில் பருவமழை சரியான நேரத்தில் தொடங்கி வந்த நிலையில், சுமார் 19 ஆண்டுகளுக்குப் பின் 16 நாள்கள் தாமதமாக இன்று தொடங்கியது. கடைசியாக 2002 ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி தாமதமாகத் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது.
செவ்வாய்க்கிழமை காலை தெற்கு தில்லியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததைத் தொடர்ந்து, தில்லியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வழக்கமாக தில்லியில் ஜூன் 27ஆம் தேதி பருவமழை தொடங்கும். நாடு முழுவதும் பருவமழை ஜூலை 8ஆம் தேதி பரவலாகப் பெய்யும். கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தில்லியில் பருவமழை தொடங்கியது, நாடு முழுவதும் ஜூன் 29ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியது.
முன்னதாக, தில்லியில் ஜூன் 15ஆம் தேதி பருவமழை தொடங்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், தாமதமாக இன்று தொடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊழியர்களுக்கான சலுகைகளைக் குறைக்கும் டெலோய்ட்! ஐவிஎஃப் சிகிச்சைக்கான நிதியையும்

கே.எல். ராகுல் 152*: தில்லி கேபிடல்ஸ் 264 ரன்கள் குவிப்பு!

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


