இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,443 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 31,443 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 118 நாள்களுக்குப் பிறகு பதிவான குறைவான எண்ணிக்கையாகும்.
49,007 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,00,63,720 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை தற்போது 4,31,315 ஆக உள்ளது. இது 109 நாள்களுக்குப் பிறகு பதிவாகும் குறைவான எண்ணிக்கையாகும்.
மொத்த பாதிப்பில் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோர் 1.40 சதவிகிதம். குணமடைவோர் விகிதம் 97.28 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் வாராந்திர விகிதம் தொடர்ந்து 5 சதவிகிதத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. தற்போது 2.28 சதவிகிதமாக உள்ளது. தினசரி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் தொடர்ந்து 20 நாள்களுக்கும் மேலாக 3 சதவிகிதத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. இது 1.81 சதவீதமாக உள்ளது.

நாட்டில் இதுவரை மொத்தம் 43.40 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தடுப்பூசி:
இந்தியாவில் இதுவரை மொத்தம் 38.14 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊழியர்களுக்கான சலுகைகளைக் குறைக்கும் டெலோய்ட்! ஐவிஎஃப் சிகிச்சைக்கான நிதியையும்

கே.எல். ராகுல் 152*: தில்லி கேபிடல்ஸ் 264 ரன்கள் குவிப்பு!

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


