/

மத்திய அமைச்சர், எம்.பி. பதவிகளை ராஜிநாமா செய்தார் தாவர்சந்த் கெலாட்

மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம், சமூகநீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்து கடிதத்தை இன்று வழங்கினார்.

News image

மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம், சமூகநீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்

Updated On :7 ஜூலை 2021, 8:49 am

மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம், சமூகநீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்து கடிதத்தை இன்று வழங்கினார்.

கர்நாடகம் உள்பட 8 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டுருந்தார். இதில், கர்நாடக மாநிலத்தின் ஆளுநராக மத்திய சமூகநீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, இன்று துணை குடியரசுத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடுவை நேரில் சந்தித்து தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.

மேலும், இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் உள்பட இரண்டு பேர் இதுவரை அமைச்சர் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.