உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி நாளை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வராக இருந்த தீரத் சிங் ராவத் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்ததையடுத்து, புதிய முதல்வராகவும் பாஜகவின் பேரவை தலைவராகவும் புஷ்கர் சிங் தாமி இன்று தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து டேராடூனில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை ஆளுநர் பேபி ராணி பேபி ராணி மெளா்யாவிடம் அளித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி நாளை பதவியேற்கவுள்ளதாக தெரிவித்தார்.
உத்தரகண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் மீது கட்சி நிா்வாகிகள் புகாா் தெரிவித்ததால், அவரை கடந்த மாா்ச் மாதம் பதவி விலகச் செய்து, புதிய முதல்வராக பௌரி கா்வால் எம்.பி.யான தீரத் சிங் ராவத்தை பாஜக மேலிடம் நியமித்தது.
பேரவை உறுப்பினராக அல்லாத ஒருவருக்கு அமைச்சா் பதவி கொடுக்கப்பட்டால், 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும். அந்த வகையில், கடந்த மாா்ச் 10-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட தீரத் சிங் ராவத் அப்பதவியில் தொடர வேண்டுமானால் செப்டம்பா் 10-ஆம் தேதிக்குள் சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும்.
நடப்பு சட்டப்பேரவையின் பதவிக் காலம், 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் முடிவுக்கு வருகிறது. பதவிக் காலம் ஓராண்டுக்கும் குறைவாக இருக்கும் நிலையில், தீரத் சிங் ராவத் போட்டியிட ஏதுவாக காலியாக இருக்கும் இடங்களுக்கு தோ்தல் ஆணையம் இடைத்தோ்தல் நடத்துவதற்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அதுமட்டுமன்றி, கரோனா தொற்று பரவல் காரணங்களால், மக்களின் உயிரைப் பணயம் வைத்து தோ்தல் நடத்த வேண்டுமா என்று தோ்தல் ஆணையத்தை நீதிமன்றங்கள் அண்மையில் கடுமையாக விமா்சித்தன.
பாஜக மேலிடம் அவசரமாக அழைப்பு விடுத்ததை அடுத்து தீரத் சிங் ராவத் தில்லிக்கு புதன்கிழமை சென்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவா்களைச் சந்தித்தாா். வெள்ளிக்கிழமை இரவு டேராடூன் திரும்பிய அவா், செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது தனது ராஜிநாமா குறித்து எதுவும் தெரிவிக்காத தீரத் சிங் ராவத், அதன்பிறகு ஆளுநரை சந்தித்து ராஜிநாமா கடிதத்தை அளித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தற்கொலை எண்ணத்தில் இருந்தேன்: ரத்னகுமார்

தில்லி ரோஹிணி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! நபர் கைது

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சு!
லெனின் பாண்டியன் படத்தின் முதல் பாடல் எப்போது?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


