/

காதலியின் தந்தையை பழிவாங்க, கடத்தல் நாடகமாடிய இளைஞர் கைது

காதலியின் தந்தையை பழிவாங்க வேண்டும் என்பதற்காக, தன்னை யாரோ கடத்திவிட்டதாக நாடகமாடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image

காதலியின் தந்தையை பழிவாங்க, கடத்தல் நாடகமாடிய இளைஞர் கைது

Updated On :29 ஜனவரி 2021, 9:02 am


சுல்தான்பூர்: காதலியின் தந்தையை பழிவாங்க வேண்டும் என்பதற்காக, தன்னை யாரோ கடத்திவிட்டதாக நாடகமாடிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில், குற்றவாளியான ஜிதேந்திர குமாருக்கு (20) உதவி செய்த நண்பர் ரவி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 23-ஆம் தேதி அமேதியைச் சேர்ந்த ஜிதேந்திரனை கடத்தியிருப்பதாகவும், அவனை விடுவிக்க வேண்டுமென்றால் 10 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் அவரது தந்தைக்கு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ரவிதான், ஜிதேந்திர குமாரின் செல்லிடப்பேசியிலிருந்து பெற்றோரை தொடர்பு கொணடு பேசியிருப்பது தெரிய வந்துள்ளது.

விசாரணை குறித்து காவல்துறையினர் கூறுகையில், ஜனவரி 24-ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு ஜிதேந்திரனின் செல்லிடப்பேசியில் புதிய சிம் பொறுத்தப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு அதே செல்லிடப்பேசியிலிருந்து புதிய எண்ணில் அழைப்பு வந்துள்ளது. எனவே, இதில் ஏதோ மர்மம் இருப்பதாக உணர்ந்ததும், அந்த சிம் எண் யார் பெயரில் இருக்கிறது என்று பார்த்த  போது, அது ஜிதேந்திரனின் நண்பர் ரவி பெயரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அவர்கள் இருக்குமிடம் கண்டுபிடிக்கப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் காதலியின் தந்தையை காவல்துறையிடம் மாட்டிவிடும் எண்ணத்தில் இந்த கடத்தல் நாடகத்தை ஆடியதாக ஒப்புக் கொண்டுள்ளார் ஜிதேந்திரன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.