ஸ்ரீநகர் மற்றும் காஷ்மீரின் சில பகுதிகளில் சனிக்கிழமை மீண்டும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. எனவே, விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த நான்கு நாள்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதையடுத்து, விமானச் சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. பின்னர், வியாழன் முதல் செயல்பட தொடங்கியது. இந்நிலையில், இன்று அதிகாலை முதல் மீண்டும் புதிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, ஸ்ரீநகரில் 4 அங்குல பனியும், தெற்கு காஷ்மீரின், குல்கமில் 5 அங்குல பனியும், அனந்த்நாக் 3 அங்குலமும், சோபியான் மாவட்டத்தில் 3 மற்றும் புல்வாமாவில் 4 அங்குல பனியும் பதிவாகியுள்ளது.
வடக்கில் பந்திபோராவில் 2 அங்குல பனியும், மத்திய காஷ்மீரின் புட்காம் மற்றும் காண்டர்பால் மாவட்டங்களில் தலா 3 அங்குலங்களாகப் பனி நிலவி வருகின்றது.
வடக்கு காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற குல்மார்க்கின் ஸ்கை ரிசார்ட்டிலும், தெற்கில் உள்ள பஹல்காம் சுற்றுலா ரிசார்ட்டிலும் பனிப்பொழிவு இருப்பதாக எந்த தகவலும் இல்லை.
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் புதிய பனிப்பொழிவு நிலவி வருவதால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓடுபாதையில் பனி குவிந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். எனவே, விமானங்கள் புறப்படுவதில் தாமதமாகியுள்ளது.
ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து ஏழாவது நாளாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

பத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

ரயில்வே துறையில் ஆள் குறைப்பு முடிவை கைவிட வேண்டும்: மாா்க்சிஸ்ட், மதிமுக கோரிக்கை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


