கடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

தில்லியில் 10 வயது சிறுவனை கடத்திக் கொன்ற 2 சிறார்கள் கைது

புது தில்லியில், 10 வயது சிறுவனை கடத்தி, அவரது பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டி, மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் சிறுவனைக் கொன்ற இரண்டு சிறார்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image

தில்லியில் 10 வயது சிறுவனை கடத்திக் கொன்ற 2 சிறார்கள் கைது

Updated On :9 ஜனவரி 2021, 12:59 pm


புது தில்லி: புது தில்லியில், 10 வயது சிறுவனை கடத்தி, அவரது பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டி, மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் சிறுவனைக் கொன்ற இரண்டு சிறார்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

புது தில்லியின் கஜுரி காஸ் பகுதியில் உள்ள ஒரு மசூதியின் இரண்டாவது தளத்தில் கட்டுமானப் பொருள்கள் போட்டு வைத்திருந்த இடத்திலிருந்து 10 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை சிறுவன் காணாமல் போன நிலையில், சிறுவனை உறவினர்களும், காவலர்களும் தேடியபோது, மசூதியின் இரண்டாவது தளத்தில் அவனது உடல் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மசூதிக்கு வியாழக்கிழமை சென்ற சிறுவன், திரும்பி வராததால், அங்கேதான் அவன் காணாமல் போயிருப்பான் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மசூதிக்குள் தேடுதல் பணி நடைபெற்ற போது, சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

சிறுவனைக் கடத்தி வந்து, மசூதிக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு, பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்ட நினைத்த சிறார்கள், தேடுதல் வேட்டை தீவிரமானதால், சிறுவனை கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளனர்.

அங்குப் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிறார்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.