கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

பிரிட்டனிலிருந்து கேரளம் திரும்பிய 6 பேருக்கு புதிய வகை கரோனா

இங்கிலாந்திலிருந்து கடந்த டிசம்பர் 14ஆம் தேதி கேரளத்துக்கு திரும்பிய ஆறு பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

News image

Kerala as 6 UK returnees test positive for corona strain

Updated On :5 ஜனவரி 2021, 9:49 am

இங்கிலாந்திலிருந்து கடந்த டிசம்பர் 14ஆம் தேதி கேரளத்துக்கு திரும்பிய ஆறு பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட ஆறு பேரில், கோழிக்கோடு, ஆலப்புழாவில் தலா இரண்டும், கோட்டயம் மற்றும் கண்ணூரில் தலா ஒன்று அடங்கும் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

இதுதொடர்பாக சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா கூறுகையில், 

பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர்,  வெளிநாடுகளில் இருந்து அதிக மக்கள் வெளியேறி வருகின்றனர். தற்போது நாம் சுயகட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். மக்கள் அவசர தேவைகளுக்காக மட்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டும். அடுத்த சில வாரங்களுக்கு இது கட்டாயம் பின்பற்றவேண்டியது அவசியமாகும் என்றார். 

இங்கிலாந்திலிருந்து திரும்பிய 6 பேருக்கு கரோனா தொற்று பரிசோதித்ததிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களின் மாதிரிகள் புணேவில் உள்ள வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. அதில், அவர்கள் ஆறு பேரும் புதிய வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இவர்கள் ஆறு பேரும் தற்போது வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் தொடர்பிலிருந்தவர்களின் பட்டியல்கள் தயாரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

இதற்கிடையில் முதல் கட்டமாக சுகாதார நிபுணர்களுக்கு 5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு அரசு மத்திய அரசிடம் கோரியுள்ளது. 

இந்தியாவில் இதுவரை 58 பேர் உருமாறிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.