ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இடங்களில் நேற்றிரவு முதல் கடும் மூடுபனி நிலவி வருவதால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஜம்முவில் கடும் பனி நிலவி வந்த நிலையில், பிப்ரவரி மாதம் முதல் நிலைமை சற்று சீரடைந்தது. ஆனாலும், இரவு நேரங்களில் அதிகமாக மூடுபனி நிலவி வருவதையடுத்து, இது காலையிலும் தொடர்ந்து அதிக பனிமூட்டம் நிலவி வருகின்றது. இதனால், மக்கள் வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அடுத்த வாரத்தில் வானிலை சற்று மேம்படு வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என்று வானிலை ஆய்வுமைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஸ்ரீநகரில் மைனஸ் 0.6, ஆகவும், பஹல்காம் மைனஸ் 4.6 ஆகவும், குல்மார்க்கில் மைனஸ் 2.4 ஆகவும், லடாக்கில் மைனஸ் 10.5, கார்கில் மைனஸ் 13 மற்றும் டிராஸ் மைனஸ் 20.6 எனவும் இரவில் மிகக் குறைந்த வெப்பநிலை நிலவி வருகின்றது.
ஜம்மு நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 9.8 ஆகவும், கத்ரா 10.5, படோட் 6.6, பன்னிஹால் 3.2 மற்றும் படேர்வா 2.7 ஆகவும் பதிவானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு

அஸ்ஸாமில் மினி பேருந்து - லாரி மோதிக்கொண்டதில் பிரபல பிஹு நடனக் கலைஞர் பலி, 11 பேர் காயம்

தவறான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆம் ஆத்மி: ராகவ் சத்தா
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


