எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து நாடாளுமன்றம் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 10 நாளாக அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அவையின் மாண்பை குலைக்கும் விதமாக உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டாம் என்று இரு அவைத் தலைவர்களும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிக்க | உத்தவ் தாக்கரேவை முற்றுகையிட்ட பாஜகவினர்; விரட்டியடிப்பு
இந்நிலையில் இன்று காலை கூடிய மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து தொடங்கிய அவையில் எதிர்க்கட்சிகள் அமளிக்கு மத்தியில் பொது காப்பீட்டு (திருத்த) மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட பின், நாளை காலை 11 மணிவரை அவையை ஒத்திவைத்தனர்
அதேபோல, மாநிலங்களவையிலும் உள்நாட்டு கப்பல் மசோதா 2021 நிறைவேற்றப்பட்டு நாளை காலை வரை அவையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் 2 நாள்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


